"இனி புற்றுநோயை குணப்படுத்தலாம்" - வெள்ளை அணுக்கள் செய்யும் மாயம்
புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்க, சர்வதேச அமைப்புகள் முன்னெடுத்த முயற்சிதான் இந்த தினம். ஒருபக்கம் புற்றுநோய்க்கான சிகிச்சைகள் மிகவும் குறைவாக இருக்க, அதற்கான செலவு மிக அதிகமாக ஏற்படுகிறது. இதனால் ஆண்டுக்கு பல உயிர்களை நாம் இழந்து வருகிறோம்...
உலக சுகாதார மையத்தின் தகவலின்படி, ஆண்டுக்கு சுமார் 4 லட்சம் குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது
2020ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் சுமார் ஒரு கோடி பேர் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர். இதில் மார்பக புற்றுநோயால் 22 லட்சம் பேரும், நுரையீரல் புற்றுநோயால் சுமார் 22 லட்சம் பேரும் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த சுழலில் ரத்த புற்றுநோயாளிகளுக்கு நற்செய்தி ஒன்றை தெரிவித்துள்ளனர் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ நிபுணர்கள்..
கலிஃபோர்னியாவை சேர்ந்த டஃக் ஒல்சன் என்பவர் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2010ம் ஆண்டு அவருக்கு மரபணு சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதாவது அவரது உடலில் இருந்த வெள்ள அணுக்களை எடுத்து, ஆய்வகத்தில் மரபணு மாற்றம் செய்து உடலில் செலுத்தப்பட்டது
புற்றுநோய் அணுக்களை தாக்கும் சக்தி கொண்ட அந்த வெள்ளை அணுக்கள், அவரது உடலில் இருந்த புற்றுநோய் அணுக்களை முற்றிலுமாக அழித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேசமயம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட வெள்ளை அணுக்கள் தற்போது வரை உயிர்ப்புடன் இருந்து வருவதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். இந்த சிகிச்சை ஒல்சன் உட்பட மூன்று பேருக்கு கொடுக்கப்பட்டதாகவும், முடிவில் மூன்றில் இருவர் முழுமையாக குணமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்று அனைத்து வகை புற்றுநோய்க்கும் உரிய சிகிச்சைகள், அனைத்து தரப்பினருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே சாமானியர்களின் எதிர்பார்ப்பு...
