கனடா ஓபன் டென்னிஸ் தொடரில் இத்தாலி இளம் வீரர் யானிக் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். டோரண்டோ நகரில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டி மினார் உடன் சின்னர் மோதினார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சின்னர், முதல் செட்டை 6க்கு 4 என்ற கணக்கில் வென்றார். தொடர்ந்து 2வது செட்டை 6க்கு 1 என்ற கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை சின்னர் தனதாக்கினார்.