நடுங்கவைத்த விமான விபத்து - வெளியானது அதிர்ச்சி வீடியோ

x

கனடாவின் டொராண்டோ நகரில் ஏற்பட்ட விமான விபத்தில் 18 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 80 பேருடன் பயணித்த டெல்டா ஏர்லைன்ஸ் விமானம், பனிமூட்டம் காரணமாக விபத்தில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமான ஓடுதளம் வறண்டு இருந்ததாகவும் காற்றின் பாதிப்பு இல்லை எனவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். விமான விபத்தை தொடர்ந்து, பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள இரண்டு ஓடு பாதைகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே, ஓடு பாதையில் தலைகுப்புற விழுந்து விமானம் தீப்பிடிக்கும் பரபரப்பு காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்