கத்தார் நாட்டில் நடைபெற்ற ஒட்டகப் பந்தயத்தில், பிரேசில் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரர் நெய்மார், தனது ஒட்டகத்துடன் கலந்து கொண்டார். டோஹா நகரில் குழந்தைகள் மற்றும் சமூக நலனுக்காக நிதி திரட்ட, இந்த ஒட்டக பந்தயம் அரங்கேற்றப்பட்டது. இதில் ஒட்டக உரிமையாளர்கள் வாக்கி- டாக்கி பயன்படுத்தி தங்கள் ஒட்டகங்களை உற்சாகமூட்டினர். பந்தயத்தில் கால்பந்து வீரர் நெய்மாரின் ஒட்டகம் கலந்து கொண்டு, 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை கைப்பற்றியது.