"நண்பா.. நண்பா" என்று சொல்லிவிட்டு நேரம் பார்த்து நெஞ்சில் குத்திய Trump - ஷாக்கில் இந்தியா
டிரம்ப் அறிக்கை - மத்திய அரசு விளக்கம்
இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு இடையேயான வர்த்தகம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையை அரசு கவனத்தில் கொண்டுள்ளதாகவும், தேசிய நலனை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்றும் மத்திய அரசு தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா ஒரு நியாயமான, பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோரை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
Next Story
