பயங்கர நிலநடுக்கம் சரிந்த கட்ட‌டங்கள்..உள்ளே இருந்தவர்களின் நிலை..?

x

துருக்கியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்ட‌டங்கள் சரிந்து விழுந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாலிகேசிர் மாகாணத்தில் உள்ள சிந்திர்கி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுற்று வட்டாரத்தில் உள்ள 5 மாகானங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. கட்ட‌டங்கள் இடிந்து விழுந்த நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் இடிபாடுகளில் இருந்து, படுகாயங்களுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்