BTSன் கம்பேக் கச்சேரி கோலாகலம்
BTSன் கம்பேக் கச்சேரி கோலாகலம்
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் உலகப் புகழ்பெற்ற கே-பாப் இசைக்குழு BTSன் கம்பேக் கச்சேரி கோலாகலமாக நடைபெற்றது...
குவாங்ஹ்வாமுன் சதுக்கத்தில் நடைபெற்ற இந்த ஒரு மணி நேர கச்சேரியை நேரில் சுமார் 2.6 லட்சம் ரசிகர்கள் காண வந்த நிலையில், கோடிக்கணக்கானோர் நெட்ஃப்ளிக்ஸ் மூலம் நேரலையில் பார்த்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளியான BTS-ன் புதிய ஆல்பம் “அரிராங்” முதல் நாளிலேயே 39.8 லட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது.
2013-ல் அறிமுகமான BTS, உலகளவில் அதிகம் ஸ்ட்ரீம் செய்யப்படும் கே-பாப் குழுவாக விளங்கி வருகிறது. கட்டாய ராணுவ சேவைக்காக இடைவேளைக்கு சென்ற இக்குழுவினர், தற்போது மீண்டும் முழுமையாக களமிறங்கியுள்ளனர்.
