உணவு வாங்க சென்ற 800 பேர் துள்ளத்துடிக்க கொல்லப்பட்ட கொடூரம்.. உலகையே உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்
காசாவில் உணவு மற்றும் மருத்துவ உதவிகளை நாடி உதவி மையங்கள் நோக்கி வந்த 800 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பது பாரபட்சமற்ற மனிதாபிமான விதிமீறல் என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவுடன் இயங்கும் காசா மனிதாபிமான அறக்கட்டளை அருகே ஐ.நா. உட்பட பிற நிவாரண குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இவை பசியால் துடித்துடித்து வரும் பாலஸ்தீன மக்களுக்கு கடந்த மே மாதம் இறுதியில் இருந்து உணவு பொட்டலங்கள் மற்றும் மருந்து பொருட்களை விநியோகிக்க நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story
