ஒரு சாமானிய பெண்ணின் திருமணத்திற்காக ஒரே இடத்தில் குவிந்த உலக தலைவர்கள்

x

உலகின் மிக நீண்ட காலம் ஆட்சி செய்யும் மன்னரும், உலகின் மிகப் பெரிய செல்வந்தராய் திகழ்ந்தவருமான ஹசனல் போல்கியாவின் 10வது பிள்ளையான 32 வயது அப்துல் மதீனுக்கும் 29 வயதான யாங் முலியா அனிஷா ரோஸ்னாவுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடைபெற்றது... அப்துல் மதீன் ராணுவ விமானியாக உள்ள நிலையில், முலியா அனிஷா ஃபேஷன் பிராண்ட் மற்றும் சுற்றுலா வணிகத்தை நடத்தி வருகிறார்... ஆயிரத்து 788 அறைகள் கொண்ட அரண்மனையில் திருமண விழா கோலாகலமாக நடைபெற்றது... விழாவில்

ஜோர்டான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளின் உயர் தலைவர்கள் அடங்கிய 5 ஆயிரம் பேர் விருந்தினர்கள் பட்டியலில் உள்ளனர்... மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் , இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினாண்ட் மார்கோஸ் ஜூனியர் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தலைநகர் பந்தர் செரி பெகவானில் மணமக்கள் ஊர்வலம் வந்து மக்களை சந்தித்தனர்... அரச குடும்பத்து திருமணத்தால் ப்ரூனே நாடு திருவிழாக்கோலம் பூண்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்