Saudi Arabia Yemen Strike | முறிந்த ஒப்பந்தம் - வான்வழித் தாக்குதலோடு தரைவழியாகக் களமிறங்கும் படைகள்

முறிந்த ஒப்பந்தம் - வான்வழித் தாக்குதலோடு தரைவழியாகக் களமிறங்கும் படைகள்

#SaudiArabia #Yemen #Strike #WarTension #WorldNews #ThanthiTV

Saudi Arabia Yemen Strike | முறிந்த ஒப்பந்தம் - வான்வழித் தாக்குதலோடு தரைவழியாகக் களமிறங்கும் படைகள்.. மீண்டும் போர் மோகம் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக மாபெரும் ராணுவ நடவடிக்கையை தொடங்கியிருப்பதாக ஏமன் நாட்டின் அதிபர் ரஷாத் அல்-அலிமி (Rashad al-Alimi) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஏமனின் அரசுக்கு சொந்தமான மீதமுள்ள பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்கவும், அரசு அதிகாரத்தை முழுமையாகப் பரப்பவும் இந்த தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தொலைக்காட்சியில் உரையாற்றினார். சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தவும், ஏமன் படைகள் தரைவழியாக போரிடவும் திட்டமிட்டுள்ளன. கடந்த 2022ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை ஒப்பந்தம் முறிந்த நிலையில், சவுதி கப்பல்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது ஹவுதிகள் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து, தற்போது இந்த போர் மீண்டும் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com