

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட 3 பேருக்கு பிரிட்டனில் கேபினட் அமைச்சர் பதவி கிடைத்துள்ளது. இதில் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனான ரிஷி சுனக், நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே, உள்துறை செயலராக பொறுப்பு வகிக்கும் பிரிட்டி படேல், அதே பதவியில் தொடர்வதாகவும், அலோக் சர்மா என்பவர், புதிய வர்த்தக செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.