நடுக்கடலில் பற்றி எரிந்த படகு.. சிக்கிய 284 பேர் - பயணிகள் கதறும் காட்சி
பற்றி எரிந்த பயணிகள் படகு - 5 பேர் பரிதாப பலி
இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் உள்ள தாலிஸ் Talise தீவில் பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...
படகு வடக்கு சுலவேசி மாகாணத்தின் தலைநகரான மனாடோவை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. படகு தீ பிடித்ததும் சிலர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள கடலில் குதித்தனர். 284 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். மின்சார கோளாறு, எரிபொருள் கசிவு அல்லது இயந்திரக் கோளாறு ஆகியவை தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது... கடலில் குதித்த சில பயணிகள் காயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
