போப் லியோ கையெழுத்திட்ட BMW மோட்டார் சைக்கிள் ஏலம்

போப் லியோ கையெழுத்திட்ட BMW மோட்டார் சைக்கிள் ஏலம்
Published on

வாடிகனில் போப் லியோ கையெழுத்திட்ட BMW மோட்டார் சைக்கிள் ஏலத்திற்கு விடப்பட உள்ளது. வாடிகன் நகரில் நடந்த நிகழ்ச்சியில் போப் லியோ, BMW மோட்டார் சைக்கிளில் கையெழுத்திட்டார். இந்த மோட்டார் சைக்கிள் பின்னர் ஏலம் விடப்பட்டு, அதன் வருமானம் குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்குச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனத்தில் கையெழுத்திட்ட பிறகு போப் பைக்கில் அமர்ந்தபோது மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். பைக் ஏலத்தின் மூலம் கிடை​க்கும் நிதி, மடகாஸ்கரில் உள்ள குழந்தைகள் உதவித் திட்டத்திற்கு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com