Bill Clinton | Epstein Files | "எதையும் பார்க்கவில்லை.." - எப்ஸ்டீன் விவகாரத்தில் பில் கிளிண்டன்

"எதையும் பார்க்கவில்லை.."

நான் எதையும் பார்க்கவில்லை – எப்ஸ்டீன் விவகாரத்தில் பில் கிளிண்டன் பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் விவகாரத்தில், தான் எதையும் பார்க்கவில்லை என்றும், தனக்கு எதுவும் தெரியாது எனவும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விசாரணையில் இது குறித்து விளக்கமளித்துள்ள அவர், தனது அறக்கட்டளை பணிகளுக்காக எப்ஸ்டீனின் தனிப்பட்ட விமானத்தில் பயணம் செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அவை அனைத்தும் பொதுநலப் பணிகளுக்காக மட்டுமே மேற்கொள்ளப்பட்டவை என்றும், தனது மனைவி ஹிலாரி கிளிண்டனுக்கும் எப்ஸ்டீனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அவரை இந்த விசாரணைக்கு அழைத்தது தேவையற்றது என்றும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com