அரசுக்கு எதிராக வீதியில் இறங்கிய மக்கள்.. - செர்பியாவில் வெடித்த போராட்டம்..
ரயில்நிலைய மேற்கூரை விபத்தில் 15 பேர் உயிரிழந்ததை கண்டித்து, செர்பியா நாட்டின் தலைநகர் பெல்கிரேட்டில் போராட்டம் நடைபெற்றது. விசில் அடித்தும், செல்போன்களை ஒளிரச் செய்தும் போராடிய மக்கள், தரமற்ற கட்டுமானத்தால் 15 பேர் உயிரிழக்க நேரிட்டதாகவும் சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். ரயில்நிலைய விபத்திற்கான காரணத்தை அரசாங்கம் ஏற்க மறுப்பதாகவும் போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினார்கள்.
Next Story
