கூகுளை அடித்து ஓடவிட்டு உலகத்தின் நம்பர் 1 நிறுவனமானது `என்விடியா’
நான்கு ட்ரில்லியன் டாலரை எட்டிய உலகின் முதல் பொது நிறுவனம் என்ற புது வரலாற்றை படைத்துள்ளது, செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிக்கும் நிறுவனமான Nvidia. இதன் மூலம் உலக பங்குச்சந்தைகளின் தலைமையிடமாக கருதப்படும் அமெரிக்காவின் நியூயார்க் நகர் பகுதி அமைந்துள்ள வால் ஸ்ட்ரீட்டின் செல்லப் பிள்ளையாக வலம் வரும் Nvidia நிறுவனம், மைக்ரோசாப்ட், ஆப்பிள், அமேசான் , கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்கு தள்ளி நான்கு ட்ரில்லியன் டாலர் மதிப்பை எட்டிய உலகின் முதல் நிறுவனமாக உருவெடுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Nvidia நிறுவனத்தின் சந்தை மதிப்பு 600 பில்லியன் டாலருக்கும் குறைவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
