உடலை வதைத்த போர்க்கள காயங்கள்... மனதை தளரவிடாத ராணுவ வீரர்கள்

x

உக்ரைன்–ரஷ்யா போர் பல வீரர்கள உடல் ரீதியா காயப்படுத்துனாலும்.. அவுங்களோட நம்பிக்கையையும் மன உறுதியையும் உடைக்க முடியல.. காயங்களோட வீடு திரும்புன சில உக்ரைன் முன்னாள் ராணுவ வீரர்கள், இன்னைக்கு நாடக கலைஞர்களா தங்களோட புதிய வாழ்க்கைய தொடங்கிருக்காங்க...

கிழக்கு உக்ரைனோட அவ்தீவ்கா பகுதில 2023ல நடந்த தாக்குதல்ல 2 கண்களையும் இழந்த ஒரு வீரர்... பார்வை இல்லேனாலும் கேட்டு கேட்டு வசனங்கள மனப்பாடம் செஞ்சு...நாடக மேடைல நடிச்சுட்டு இருக்காரு...கீவ் நகரச் சேர்ந்த ‘வெட்டரன்ஸ் தியேட்டர்’ அப்டின்ற குழுல சுமார் 15 முன்னாள் வீரர்கள் நடிக்கிறாங்க... யாருக்கும் முன் அனுபவம் இல்ல... ஆனால் நாடகம் அவுங்களுக்கு சிகிச்சையாவும், சமூகத்தோட மறுபடியும் இணைக்கும் பாலமாவும் மாறிருக்கு..போர்ல கடுமையா காயமடைஞ்சு முகம் எரிஞ்ச நிலைல பேசவே கஷ்டப்படுற சூழல்லயும்...ஒருவீரர் கடினமான பயிற்சிகளையும் நடனங்களையும் கத்துக்குறாரு..கீவில் நடந்த முதல் நிகழ்ச்சில, இந்த வீரர்கள் நடிச்சப்ப, பார்வையாளர்கள் கண்ணீரோடும் கைதட்டலோடும் வரவேற்றாங்க...


Next Story

மேலும் செய்திகள்