நேபாளத்தில் பனிச்சரிவு - 7 பேர் உயிரிழப்பு
நேபாளத்தின் டோலாகா மாவட்டத்தில் உள்ள யாலுங் ரி சிகரத்தின் அடிவாரத்தில் உள்ள முகாமை தாக்கிய பனிச்சரிவில் சிக்கி ஐந்து வெளிநாட்டைச் சேர்ந்த மலையேறும் வீரர்கள் உட்பட ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் மூவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் கனடாவை சேர்ந்தவர் என்றும் மற்றொருவர் இத்தாலியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் நேபாளத்தைச் சேர்ந்த இருவரும் இந்தப் பனிச்சரிவில் உயிரிழந்துள்ளனர்.
Next Story
