மரக்கட்டை வெட்டும் போட்டியில் ஆஸி. அணி 6வது முறையாக சாம்பியன்
Timbersports எனப்படும் மரக்கட்டை வெட்டும் போட்டியில், ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்றுள்ளது.
மரக்கட்டையை கோடாரியால் வெட்டுதல், மின்சாரத்தில் இயங்கும் அறுக்கும் வாளைக் கொண்டு மரக்கட்டைகளை வெட்டி துண்டாக்குதல் உள்ளிட்ட போட்டிகள் அடங்கிய உலக சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து 6வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. ஸ்வீடன் அணிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
Next Story
