Trump | JD Vance | டிரம்பின் நிழலுக்கு வைக்கப்பட்ட குறி - அமெரிக்காவில் திடீர் தாக்குதலால் பதற்றம்
அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின், ஓஹியோ இல்லத்தில் மர்ம நபர் ஒருவர் சுத்தியலால் ஜன்னல்களை உடைத்து அத்துமீற முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை. தாக்குதல் நடத்திய நபரை ரகசிய சேவை பிரிவினர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அந்த நபர், மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் துரிதமாக செயல்பட்ட பாதுகாப்பு படையினருக்கு ஜேடிவான்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.
Next Story
