கண்ணுக்கு தெரியாமல் `ஊசி’ போல் வந்து ராணுவ அலுவலகத்தை உருக்குலைத்த பயங்கரம்
உக்ரைன் ராணுவ அலுவலகத்தை தாக்கிய ரஷ்ய ட்ரோன்
உக்ரைனின் சுமி பகுதியில் உள்ள ராணுவ நிர்வாக கட்டடத்தை ரஷ்ய ட்ரோன் தாக்கியுள்ளது. உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுமி நகரின் மையத்தில் உள்ள இராணுவ நிர்வாகக் கட்டிடம் குறி வைத்து ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதில் கட்டடம் பலத்த சேதமடைந்தது. இந்த ட்ரோன் தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ நிர்வாக கட்டடம் தாக்கப்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
Next Story
