அமெரிக்கா செய்த துரோகம் - ஆவேசமாக பேசிய மார்க் கார்னி

x

கனடாவில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வென்று மார்க் கார்னி தலைமையிலான லிபரல் கட்சி, நான்காவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. தேர்தலில் லிபரல் கட்சி, கன்சர்வேட்டிவ் கட்சி மற்றும் காலிஸ்தான் ஆதரவு புதிய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் களம் கண்டன. மொத்தமுள்ள 343 இடங்களில் பெரும்பான்மைக்கு 172 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், சுமார் 169 இடங்களை லிப்ரல் கட்சி வென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெற்றிக்கு பின் பேசிய மார்க் கார்னி, அமெரிக்கா உடனான பரஸ்பர நன்மை தரும் அமைப்பு முடிவுக்கு வந்ததாகவும், அமெரிக்காவின் துரோகத்தை கனடா ஒருபோதும் மறக்காது எனவும் ஆவேசமாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்