Trump | உலகே பொறாமைப்பட ஆசை தீர கொண்டாடி தீர்த்த அமெரிக்கா.. உணர்ச்சிவசப்பட்ட டிரம்ப்

கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் கடற்கரை பாலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக லாஸ் வேகாஸ் நகரில் பிரம்மாண்டமான வாண வேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நகரின் முக்கிய ஹோட்டல்கள் மற்றும் கேசினோக்களின் கூரைகளிலிருந்து நடத்தப்பட்ட இந்த கண்கவர் வாணவேடிக்கையை ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர். சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது வாஷிங்டன் டி.சி.யில் நிலவிய மோசமான வானிலையும், மின்னல் கீற்றுகளும் பிரம்மாண்ட வானவேடிக்கைகளுக்கு இடையே ஒரு தத்ரூபமான காட்சியை அரங்கேற்றியது. மழையால் சுமார் இரண்டு மணி நேரம் தாமதமான இந்த நிகழ்வில், அதிபர் டிரம்ப் பங்கேற்று தேசப்பற்று குறித்து உரையாற்றினார்.

X

Thanthi TV
www.thanthitv.com