America vs China | Trump | டிரம்ப் திடீர் அறிவிப்பால் பரபரப்பு
4 வாரத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்திக்க போவதாக டிரம்ப் அறிவிப்பு அடுத்த நான்கு வாரத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்தித்து அமெரிக்க விவசாயிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண போவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.அமெரிக்காவிடமிருந்து அதிகளவில் சோயாபீன்ஸ் கொள்முதல் செய்துவந்த சீனா, கூடுதல் வரி விதிப்பால் பிரேஸில், அர்ஜென்டீனாவிடம் சோயாபீன்ஸ் கொள்முதல் செய்ய தொடங்கியது.இதனால் அமெரிக்க விவசாயிகள் பாதிப்படைந்த நிலையில், இந்த விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின் பிங்கை நான்கு வாரத்தில் சந்தித்து தீர்வு காண போவதாக சமூக வலைதளத்தில் டிரம்ப் அறிவித்துள்ளார்.விவசாயிகளுக்கு நன்மை அளிக்கும் வகையில் சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முந்தைய அதிபர் ஜோ பைடன் நடைமுறைப்படுத்த தவறிவிட்டதாக கூறிய டிரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்ததை நியாயப்படுத்தும் வகையில் தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.கூடுதல் வரியிலிருந்து கிடைக்கும் வருவாயில் சொற்ப தொகையை அமெரிக்க விவசாயிகளுக்காக தாம் செலவிடுவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
