America | Volcano | மீண்டும் வெடித்துச் சிதறிய கிலாவியோ எரிமலை.. கொப்பளிக்கும் நெருப்பு குழம்பு
மீண்டும் வெடித்துச் சிதறிய கிலாவியோ எரிமலை.. கொப்பளிக்கும் நெருப்பு குழம்பு
America | Volcano | மீண்டும் வெடித்துச் சிதறிய கிலாவியோ எரிமலை.. கொப்பளிக்கும் நெருப்பு குழம்பு மீண்டும் வெடித்த கிலாவியோ எரிமலை - ஆறாய் ஓடும் லாவா அமெரிக்காவின் ஹவாய் தீவில் உள்ள கிலாவியோ எரிமலை மீண்டும் கடும் சீற்றத்துடன் வெடிக்க தொடங்கியுள்ளது. எரிமலையில் இருந்து லாவா குழம்புகள் பீறிட்டு எழுந்ததுடன், சாம்பல் மற்றும் புகை மேகங்கள் வானில் பரவின. இந்த எரிமலை வெடிப்பால் உருவான புகை மேகம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 35 ஆயிரம் அடி உயரம் வரை உயர்ந்துள்ளது. தற்போதைய இந்த நிகழ்வு, கிலாவியோ எரிமலையின் 42வது வெடிப்பு ஆகும். இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், 2024 டிசம்பர் 23 முதல் இந்த எரிமலையில் வெடிப்புகள் நிகழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
