America | Trump News | மீண்டும் ஒரு வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்
அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வந்த வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளதாக, அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல், சர்வதேச கடல் பரப்பில் நடந்துள்ளது என்றும், இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், அந்தக் கப்பலில் போதைப்பொருள் இருந்ததற்கான ஆதாரம் எதையும் டிரம்ப் வெளியிடவில்லை. ஏற்கெனவே கடந்த 3-ஆம் தேதி ஒரு வெனிசுலா கப்பல் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இது, இரண்டாவது சம்பவம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
