அனல் பறக்க டிரம்ப் பிரசாரம்...திடீரென துள்ளி குதித்து என்ட்ரி கொடுத்த எலான் மஸ்க் - ஆரவாரத்தின் உச்சியில் மக்கள்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக, தொழிலதிபர் எலான் மஸ்க் பிரசாரம் மேற்கொண்டார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் மீது, கடந்த ஜூலை 13ஆம் தேதி பென்சில்வேனியாவில் பிரசாரம் மேற்கொண்ட போது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. காதில் சிறு காயத்துடன் உயிர் தப்பிய டிரம்ப், இரண்டு மாதங்களுக்கு பிறகு அதே பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அவருக்கு ஆதரவாக முதல்முறையாக பிரசாரத்தில் கலந்துகொண்ட உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க், அமெரிக்க மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான தேர்தல் நடக்க இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக, டிரம்புக்கு ஆதரவாக மேடையேறிய எலான் மஸ்க், குதித்தபடி ஆரவாரம் செய்த காட்சிகள் கவனத்தை ஈர்த்துள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com