America | கப்பல்துறை உணவகத்தில் துப்பாக்கிச் சூடு - 3 பேர் பலி - 8 பேர் காயம்

x

அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள கப்பல்துறை உணவகத்தில், மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்கன் ஃபிஷ் கம்பெனி உணவகத்தின் மீது, படகில் இருந்து துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 8 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கி சூட்டில் சம்பந்தப்பட்ட நபர் ஒருவர் தப்பி ஓடிய நிலையில் போலீசார் அவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து தீவிர விசாரணையும் நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்