

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோபைடன் நிர்வாகத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நீரா தண்டன் என்ற பெண் முக்கிய பொறுப்பில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்க நிதித்துறையில் இயக்குனராக நீரா தண்டன் நியமிக்கப்படுவார்
என்றும் , அவர் ஏற்கனவே முன்னாள் அதிபர்களுக்கு ஆலோசகராக செயல்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்க துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் , அமெரிக்க கொரோனா தடுப்பு மருத்துவ குழுவில் தமிழகத்தை சேர்ந்த செலின் ராணி கவுண்டர் தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.