"நடப்பாண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து" - அமெரிக்கா அதிபர் டிரம்ப்

கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை நடப்பாண்டின் இறுதிக்குள் அமெரிக்கா கண்டுபிடித்துவிடும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
"நடப்பாண்டின் இறுதிக்குள் கொரோனாவுக்கு மருந்து" - அமெரிக்கா அதிபர் டிரம்ப்
Published on
கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை நடப்பாண்டின் இறுதிக்குள் அமெரிக்கா கண்டுபிடித்துவிடும் என அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் பணிக்கு 'Operation Warp Speed என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எனினும் தடுப்பு மருந்து இல்லாமலேயே அமெரிக்கர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார். செய்தியாளர்கள் சந்திப்பின் போது வெள்ளை மாளிகை முன்பு ஊதிய உயர்வு கோரி டிரக் ஓட்டுனர்கள் ஒலி எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com