புதினை போட்டு தள்ள அமெரிக்கா பிளான்?.. `பேரழிவு'.. அணு ஆயுத போர் - பேரதிர்ச்சியில் உலக நாடுகள்

x

முன்னாள் அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகம், ரஷ்ய அதிபர் புதினைப் படுகொலை செய்யத் திட்டமிட்டதாக பிரபல அமெரிக்க செய்தியாளர் டக்கர் கார்ல்சன் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் “புதினைப் படுகொலை செய்வதற்கான சதி...அது பற்றிய விவாதம் ஒரு குற்றம்... புதினைப் படுகொலை செய்ய நினைத்தால் பேரழிவு நிகழும்...அணு ஆயுதப் போர் வெடிக்கும்“ என்று ரஷ்ய பாராளுமன்ற சபாநாயகர் வியாசஸ்லாவ் வோலோடின் (Vyacheslav Volodin) கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், புதினுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவரது செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov), புதின் படுகொலை முயற்சி குறித்து எதுவும் மறுப்பு தெரிவிக்காதது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்