முகர்ந்து பார்த்தாலே வாந்தி வரும் ``பிண மலர்'' - அதிசயித்து பார்க்கும் மக்கள்
அமெரிக்காவின் புரூக்ளின் தாவரவியல் பூங்காவில் மிக மோசமான நாற்றம் வீசும் “பிண மலர்“ என்று அழைக்கப்படும் பூ முதன்முறையாக பூத்துள்ள நிலையில், அதைக் காண மக்கள் குவிந்தனர்... பொதுவாகவே மலர்கள் என்றால் நல்ல நறுமணம் தான் நம் நினைவுக்கு வரும்... ஆனால் இந்தோனேசியாவின் சுமத்ரா தீவை பூர்வீகமாகக் கொண்ட இந்த வித்தியாசமான மலரை நீங்கள் நுகர்ந்தால் குமட்டல் தான் வரும்... ஏனெனில், அழுகிய முட்டை, கெட்டுப் போன இறைச்சி, மலம், துவைக்காத சாக்ஸில் இருந்து வரும் அறுவறுக்கத்தக்க நாற்றம் தான் இந்த பிண மலரை நுகர்ந்தால் வரும்... இருந்தபோதும் நல்ல நறுமணமும் அவ்வப்போது வீசும் என்று பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story
