அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3 ஆந் தேதி நடைபெற உள்ளது. குடியரசு கட்சியின் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் ஜோ பிடன் ஆகியோர் களத்தில் உள்ளனர். இந்த நிலையில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் ஜோ பிடன், அதிபர் வேட்பாளராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 77 வயதான ஜோ பிடன், இந்த அறிவிப்பு தமக்கு வாழ்நாள் கவுரவம் என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.