அதிபரானதும் பழிவாங்கிய டிரம்ப்.. அடிபணிந்த முக்கிய நாடு - உலகமே அதிர்ச்சியில்
கொலம்பியாவுக்கு எதிராக வரிவிதிப்பு உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்துள்ளார். அமெரிக்காவில் இருந்து அகதிகளுடன் அனுப்பி வைக்கப்பட்ட 2 விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதி மறுத்துள்ளது. இதற்கு பழிவாங்கும் வகையில், கொலம்பியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான கட்டணத்தை 25 சதவீதமாக உயர்த்துவதாக அறிவித்துள்ளார். இந்த இறக்குமதி வரி, அடுத்த வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், கொலம்பிய அரசு அதிகாரிகள், அவர்களை சார்ந்தோருக்கான விசாக்களை திரும்பப் பெறுவதோடு, அமெரிக்காவுக்குள் பயணிக்கவும் தடை விதிப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
Next Story
