மனிதனுக்குப் பொருத்தப்பட்ட பன்றியின் கிட்னி - அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்குப் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மனிதனுக்குப் பொருத்தப்பட்ட பன்றியின் கிட்னி - அமெரிக்க மருத்துவர்கள் சாதனை
Published on

மாறி வரும் நாகரீக உலகில் நோய்கள் ஒரு புறம் அதிகரித்தாலும், அவற்றை குணப்படுத்துவதற்கான சிகிச்சை முறைகளையும் மறு பக்கம் மருத்துவர்கள் கண்டறிந்து வருகின்றனர்...

மனித உறுப்புகளை மனிதனுக்கு மாற்றுவதில் தொடங்கி, விலங்குகளின் உறுப்புகளை மனிதனுக்குப் பொருத்தும் அளவுக்கு அசாத்திய வளர்ச்சி அடைந்து பிரம்மிக்க வைக்கிறது, மருத்துவத் துறை.

இது தொடர்பான சோதனைகள் பல நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க மருத்துவர்கள் இத் தேடலுக்கான விடையைக் கண்டுபிடித்துள்ளனர்...

நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யூ லங்கோன் மருத்துவமனையில், இந்த அதிசயம் நிகழ்ந்துள்ளது...

மூளைச்சாவடைந்த ஒரு பெண்ணின் சிறு நீரகம் செயலிழக்கும் தருவாயில் இருந்தது...சோதனை முயற்சியாக பன்றியினுடைய சிறுநீரகத்தைப் பொருத்த அப்பெண்ணின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்தனர்...

சோதனை தொடர்ந்த நிலையில், மரபணு மாற்றப்பட்ட பன்றியிடம் இருந்து எடுக்கப்பட்ட சிறு நீரகத்தை அப்பெண்ணிற்குப் பொருத்தியதில், சிறு நீரகம் நன்கு இயங்குவதைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்...

ஆனால் மனிதனுடைய ரத்த நாளங்களுடன் பன்றியின் சிறுநீரகம் பொருந்துவதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது...

அதனால், உடலின் வெளிப்புறத்தில் தொடையின் மேல் பகுதியின் மீது 3 நாட்கள் வரை சிறு நீரகத்தை வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டது...

மனிதனுடைய சிறுநீரகத்தை மற்றொரு மனிதனுக்குப் பொருத்தும்போது, சிறு நீரகத்தில் எதிர்பார்க்கப்படும் சிறு நீரின் அளவைப் பன்றியின் சிறு நீரகத்திடமும் காண முடிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்...

அப்பெண்ணின் கிரியேட்டின் அளவு சிறு நீரக செயலிழப்பு காரணமாக மிகவும் அசாதாரணமாக இருந்த நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கிரியேட்டின் இயல்பு நிலைக்குத் திரும்பியதாகவும் மருத்துவர்கள் ஆச்சரியம் தெரிவித்தனர்...

அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட 1 லட்சத்து 7 ஆயிரம் பேர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காகவும், அதில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிறு நீரகத்திற்காகவும் 5 வருடங்கள் வரை காத்துக் கொண்டிருக்கின்றனர்...

இந்நிலையில், அமெரிக்க மருத்துவர்களின் இந்த புதிய சாதனை மருத்துவத் துறையில் ஒரு புதிய மைல் கல்லை எட்டியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com