ஐரோப்பிய நாடுகளுடனான அனைத்து வித பயணங்களுக்கும் அமெரிக்கா தடை விதித்திருந்தது. இந்த புதிய கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வருவதை அடுத்து, ஐரோப்பி நாடுகளில் இருந்து திரும்பிய பயணிகளின் கூட்டத்தால் அமெரிக்க விமான நிலையங்கள் ஸ்தம்பித்தன . பயணிகள் அனைவரும் நீண்ட வரிசையில் நிற்கவைப்பட்டு, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பல மணி நேரம் காத்திருத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.