அமேசான் காட்டுத்தீ விவகாரம் : "டைட்டானிக் நாயகன் காரணம்" - பிரேசில் அதிபர்

அமேசான் காட்டுக்கு தீ வைத்தது டைட்டானிக் பட நாயகன் தான் என பிரேசில் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார்.
அமேசான் காட்டுத்தீ விவகாரம் : "டைட்டானிக் நாயகன் காரணம்" - பிரேசில் அதிபர்
Published on

அமேசான் காட்டுக்கு தீ வைத்தது டைட்டானிக் பட நாயகன் தான் என பிரேசில் அதிபர் குற்றம்சாட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் அமேசானில் காட்டுத்தீ ஏற்பட்ட சம்பவம் குறித்து சர்வதேச தலைவர்கள் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகர், நடிகைகள் கவலை தெரிவித்தனர். அப்போது பிரபல ஹாலிவுட் நடிகர் டிகாப்ரியோ வேதனை தெரிவித்ததோடு காட்டுத்தீயை அணைக்க 36 ஆயிரம் கோடி ரூபாய் நிதி வழங்குவதாக அறிவித்தார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ டிகாப்ரியோ பணம் கொடுத்து அமேசான் காடுகளுக்கு தீ வைத்ததாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com