Iran Israel War | கிடுகிடுத்த ஈரான் தலைநகர் - விடாமல் ஒலித்த சைரன்

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இரவு நேரம் இரு கட்டங்களாக வான்வழி தாக்குதல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் நகரின் வான் பாதுகாப்பு அமைப்புகள் செயல்படுத்தப்பட்டதுடன், எச்சரிக்கை சைரன்களும் ஒலித்தன. தொடர்ச்சியான வெடிப்பு சத்தங்களால் வானம் ஒளிர்ந்ததுடன், சில பகுதிகளில் மின் தடை ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், டெஹ்ரான் மீதான வான் தாக்குதல்கள் கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com