Airport Car Crash | ஏர்போர்ட் டிக்கெட் கவுன்டருக்குள் புகுந்த கார் - 6 பேருக்கு நேர்ந்த கதி
அமெரிக்காவில் விமான நிலைய டிக்கெட் கவுன்டருக்குள் புகுந்த கார்
அமெரிக்காவில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு விமான நிலைய டிக்கெட் கவுன்டருக்குள் கார் புகுந்ததில், 6 பேர் காயமடைந்தனர்.
டெட்ராய்ட் நகரின் விமான நிலையத்தில் மெக் நமாரா டெர்மினலில் McNamara Terminal இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காரணமான கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்தால் விமான சேவை பாதிக்கப்படவில்லை என்றும், பயணிகள் மாற்றுப் பாதையில் விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
