லாஸ் ஏஞ்சல்ஸை தொடர்ந்து சிகாகோவிலும் தலைவலி.. டிரம்புக்கு அடுத்த அதிர்ச்சி

x

டிரம்ப் அரசுக்கு எதிராக சிகாகோவில் போராட்டம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்படும் நிலையில், அதற்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வலுத்துள்ளன. லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இல்லினாய்ஸ் மாகாணம் சிகாகோ நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாகச் சென்றனர். பின்னர் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, போலீஸ் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றனர். அப்போது இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்