ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் : தலிபான்கள் பெறும் நிதி, ஆயுத உதவிகள் எங்கிருந்து எப்படி கிடைக்கிறது

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியிருக்கும் நிலையில், தலிபான் தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி, ஆயுத உதவி எங்கிருந்து எப்படி கிடைக்கிறது என்பதை அலசுகிறது, இந்த தொகுப்பு...
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் : தலிபான்கள் பெறும் நிதி, ஆயுத உதவிகள் எங்கிருந்து எப்படி கிடைக்கிறது
Published on

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

அதிபர் அஷரப் கனி தஜிகிஸ்தானுக்கு தப்பியோடியதால், ஆட்சி அதிகாரம் மீண்டும் தலிபான்கள் வசம் சென்றுள்ளது. இதனால், நாட்டை விட்டு வெளியேற விமான நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், ஒரே வாரத்தில் ஏறத்தாழ அனைத்து பகுதிகளையும் தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.

ஒரு நாட்டைக் கைப்பற்றும் அளவுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகளை தலிபான்கள் பெற்றிருப்பதே, இதற்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வளைகுடா நாடுகள் உட்பட பல நாடுகளிடம் இருந்து கடந்த ஆண்டு மட்டுமே 1,800 கோடி ரூபாயை தலிபான்கள் நன்கொடையாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

உணவு போன்ற பொருட்கள் ஏற்றுமதி மூலம் ஆண்டுக்கு 1,700 கோடி ரூபாயும், ரியல் எஸ்டேட் தொழில் மூலம் 600 கோடி ரூபாயும் வருவாயாக பெற்றுள்ளனர்.

போதைப் பொருள் கடத்தல் மூலம் ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் நிதி ஆதாயம் பெறும் தலிபான்கள், சுரங்கப்பணியின் மூலம் கடந்த ஆண்டு மட்டுமே 3,400 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டியுள்ளனர்.

இது மட்டுமின்றி, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நட்பு நாடுகளிடம் இருந்து ஆண்டுதோறும் 3,700 கோடி ரூபாய் வரை நிதி ஆதாயம் பெற்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com