

ஆப்கானிஸ்தானின் அதிபராக தேர்வாகியுள்ள அதிபர் அஷ்ரப் கனியின் பதவியேற்பு விழா தலைநகரான காபூலில் இன்று நடைபெற்றது. அதிபர் அஷ்ரப் கனி உறுதி மொழி ஏற்றபோது, அந்த கட்டிடத்தின் அருகே துப்பாக்கி சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டன. இதனை கொஞ்சமும் பொருட்படுத்தாது, தொடர்ந்து உரையாற்றிய அதிபர் அஷ்ரப், வெடிகுண்டுகளுக்கு பயப்படவில்லை என்றும் ஆப்கானிஸ்தானுக்காக உயிரிழக்க தயார் என்றும் கூறினார். அந்த சமயத்தில் அருகில் இருந்த அதிபரின் மனைவி அங்கிருந்தபடியே, மக்களை நோக்கி கையசைத்து தைரியம் கொடுத்தார். அதிபரின் துணிச்சல் உரைக்கு பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.