சிங்கத்துக்கும் புலிக்கும் பிறந்த விசித்திர குட்டி
ஐரோப்பிய நாடான ருமேனியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் பிறந்த கலப்பினமான அரிய வகை சிங்கம்-புலி குட்டி பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது... Goliath பிறந்து 2 மாதங்கள் தான் ஆகின்றது... சிங்க தந்தைக்கும், புலி தாய்க்கும் பிறந்த இந்த சிங்கம் புலி குட்டியான Goliath ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலிகளும் சிங்கங்களும் பொதுவாக காடுகளில் இனப்பெருக்கம் செய்யாது... கட்டாயப்படுத்தியே உயிரியல் பூங்காக்களில் இரண்டையும் இனச்சேர்க்கை செய்ய வைத்து குட்டியை ஈன வைக்க முடியும்... அப்படி பிறக்கும் சிங்கம் புலி குட்டிகள் பெரும்பாலும் தன் பெற்றோரை விட பெரியதாக இருக்கும்... பொதுவாக ஏதாவது குறைபாடுகளுடன் பிறக்கும் இவை, இளம் வயதிலேயே இறப்பதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது... சொல்லப்போனால் Goliath-தின் சகோதரி கூட உயிர் பிழைக்கவில்லை எனும் நிலையில், தற்போது Goliath-ஐ ஊழியர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.
