Flight | அவசரமாய் நடு ரோட்டில் தரையிறங்கிய விமானம்.. பாதியாய் நொறுங்கிய கார் - என்ன நடந்தது?
அவசரமாய் நடு ரோட்டில் தரையிறங்கிய விமானம்..
ஜார்ஜியா நாட்டின் கெய்னெஸ்வில் நகரில் குட்டி விமானம் ஒன்று அவசரமாக சாலையில் தரையிறங்கியது. வானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை உணர்ந்த விமானி, உடனடியாக சாலையில் விமானத்தை தரையிறக்கினார். போக்குவரத்து நெரிசல் மிக்க சாலையில், குட்டி விமானம் தரையிறங்கிய நிலையில், அவ்வழியாக சென்ற வாகனங்கள் மீது மோதி சிறிய அளவில் விபத்து ஏற்பட்டது. இதில் விமானத்தின் முகப்பு பகுதியும், கார் ஒன்றும் சேதமடைந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
