ரஷ்யாவில் இருந்து வந்த புதிய பகீர் ஆடியோ
ரஷ்யாவில் உள்ள கடலூர் மாணவனை மீண்டும் போருக்கு செல்ல நிர்பந்திப்பதாக மாணவன் வெளியிட்ட புதிய ஆடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த கிஷோர் சரவணன் மருத்துவ படிப்பிற்காக ரஷ்யா சென்ற நிலையில், வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் உள்ளார். இந்த நிலையில் உக்ரைன் போருக்கு சிறைவாசிகளை ரஷ்யா ஈடுபடுத்துவதால், தன்னையும் அனுப்ப உள்ளதாக கடந்த மாதம் கிஷோர் ஆடியோ வெளியிட்டிருந்தார். இதனையடுத்து மகனை மீட்க மத்திய மாநில அரசுகளுக்கு கிஷோரின் பெற்றோர் மனு அளித்திருந்த நிலையில், மீண்டும் கிஷோர் ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
Next Story
