இந்தியாவுக்கு புது சிக்கல்..? ஒன்று கூடிய பெரும் தலைகள்... திரும்பிய உலகின் பார்வை

x
  • இருபெரும் வல்லரசு நாடுகளான சீனா மற்றும் அமெரிக்க அதிபர்களான ஜி ஜின்பிங் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் இன்று சந்தித்து இருதரப்பு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்...
  • இரு நாடுகளுக்கும் இடையே உரசல் நீடித்து வரும் நிலையில், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் அபெக் எனப்படுகின்ற ஆசிய - பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மையம் சார்பில் உச்சிமாநாடு நடைபெற்றது...
  • இதில் பங்கேற்க அமெரிக்கா சென்றார் ஜின்பிங்...
  • தைவான் விவகாரம், ரஷ்யா - உக்ரைன், காசா - இஸ்ரேல் போர் விவகாரங்கள், சீனாவின் உளவு பலூன் சர்ச்சை, பொருளாதாரத் தடைகள் என இருநாடுகளும் எதிரும் புதிருமாக உள்ள நிலையில், அதிகரித்து வரும் பதற்றத்தைத் தணிக்கும் முயற்சியாக அமெரிக்காவும் சீனாவும் இராணுவத் தொடர்புகளை மீண்டும் தொடங்க ஒப்புக்கொண்டுள்ளதாக பைடன் தெரிவித்துள்ளார்...
  • ஜின்பிங் மற்றும் தனக்கு இடையே நேரடி தகவல் தொடர்பு சரியாக இல்லாத காரணத்தால் தான் பிரச்சினை இருந்ததாகத் தெரிவித்த பைடன், இனி தானும் ஜின்பிங்கும் நேரடி தொடர்பை ஏற்படுத்த ஒப்புக் கொண்டதாகவும் பைடன் குறிப்பிட்டுள்ளார்...
  • தைவான் சீனா இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், கடந்த ஆண்டு அப்போதைய அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு பயணம் செய்தியது சர்ச்சையைக் கிளப்பியது...
  • இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான ராணுவ தொடர்பை சீனா துண்டித்தது. சீனா, தைவானை தன்னுடைய பிரதேசமாகவே கருதுகிறது...
  • தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக அதை சீனாவுடன் இணைக்கப் போவதாகவும் அச்சுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது...

Next Story

மேலும் செய்திகள்