ஆப்பிள் ஷோரூமில் மாஸ்க் அணிந்து பொருட்களை அள்ளிய மர்ம கும்பல் - வைரலாகும் வீடியோ

x

அமெரிக்காவின், குடியேற்ற கொள்கைக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்சில் மாஸ்க் அணிந்த மர்ம நபர்கள், ஆப்பிள் ஷோ ரூமில் நுழைந்து பொருட்களை அள்ளிச் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆப்பிள் ஷோ ரூமுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை அள்ளிச் சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைவதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடினர். இதனிடையே, கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்படுவதைத் தடுக்கும் வகையில், இரவுநேர ஊரடங்கை, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் Karen Bass பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்