5 மாடி குடியிருப்பு கட்ட‌டம் இடிந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு

5 மாடி குடியிருப்பு கட்ட‌டம் இடிந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்ட‌டம் இடிந்து விழுந்த‌தில், 7 பேர் உயிரிழந்துள்ளனர். கராச்சியில் உள்ள லயரி பகுதியில் 5 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 12 குடும்பங்கள் வசித்து வந்தனர். இந்நிலையில், காலை 10.10 மணியளவில் திடீரென கட்ட‌டம் இடிந்து தரைமட்டமானது. விரைந்து சென்ற மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 7 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளனர். கட்ட‌டம் ஆபத்தான நிலையில் இருப்பதால் உடனே காலி செய்ய வேண்டும் என 3 முறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள சிந்து கட்ட‌ட கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள், எச்சரிக்கையையும் மீறி காலி செய்யாமல் தங்கியிருந்த‌தாக விளக்கம் அளித்துள்ளனர். அதே நேரத்தில், இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க உயர்மட்ட குழு அமைத்து, 3 நாட்களில் விரிவான அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சிந்து கட்ட‌ட கட்டுப்பாட்டு ஆணையத்தின் துணை இயக்குநர் மற்றும் கட்ட‌ட‌ ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com