

இஸ்லாமியரான இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 6 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவர், தாய்லாந்தில் 11 வயது சிறுமியை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தகவல், சமூக வலை தளங்களில் வேகமாக பரவியது.
இந்தத் தகவல் மலேசியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்துக்கு எதிர்ப்பு குரல்கள் எழத் துவங்கியுள்ளன.
தனக்கு எதிராக கிளம்பியுள்ள எதிர்ப்புக்கு அப்துல் கரீம் பதில் அளித்துள்ளார். சிறுமியின் பெற்றோர் சம்மதத்தில் திருமணம் நடந்ததாகவும் அந்த சிறுமியின் 16வது வயது வரை பெற்றோருடனே இருப்பாள் என்று கூறுயுள்ளார்.
மலேசியாவில் 18 வயதுக்கு குறைந்த பெண்களை திருமணம் செய்வது குற்றம். ஆனால் இஸ்லாமிய சட்டப்படி ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டுமானால் குறைந்தது 16 வயதாவது இருக்க வேண்டும். அதற்கும் குறைவான வயதில் திருமணம் செய்ய 'ஷியா' நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும்.
இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளதால் இதுகுறித்து விசாரணைக்கு மலேசிய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்னொரு பக்கம் அப்துல் கரீமை திருமணம் செய்து கொண்ட சிறுமியோ, 'அவர் ரொம்ப நல்லவர், நல்ல மனிதர். அவரை நான் விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.