41 உயிர்கள்; காலைவாரிய பிளான் `A'; களமிறக்கப்படும் பிளான் `B'..!சர்வதேச நிபுணர் சொன்ன முக்கிய தகவல்

• உத்தரகாசி சுரங்கப்பாதை விபத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. • ஆகர் இயந்திரம் மூலம் பக்கவாட்டில் துளையிடும் ப்ளான் ஏ பணி தோல்வியடைந்த நிலையில், மலையின் மேற்பகுதியில் இருந்து செங்குத்தாக துளையிடும் ப்ளான் பி        பணி தொடங்கப்பட்டுள்ளது. • மலைப் பகுதியில் செங்குத்தாக துளையிடுவதற்காக சுரங்கப்பகுதியிலிருந்து குறைந்த உயரம் கொண்ட இரண்டு பகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அந்தப்                        பகுதிக்கு  மிகப் பெரிய துளையிடும் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. • இதன்படி, செங்குத்தாக துளையிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. • இதனிடையே, குழாயின் நிலைமை குறித்து மதிப்பாய்வு செய்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை  எடுக்கப்படும் என சர்வதேச சுரங்கப்பாதை நிபுணர் அர்னால்ட் டிக்ஸ்     தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com